search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நியூசிலாந்து வங்காளதேசம் தொடர்"

    தோள்பட்டை காயத்தால் கேன் வில்லியம்சன் அவதிப்பட்டு வருகிறார். உலகக்கோப்பை தொடர் நெருங்கும் நேரத்தில், இது நியூசிலாந்துக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. #NZvBAN
    நியூசிலாந்து - வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் வெலிங்டனில் நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு நாட்கள் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. நேற்று 3-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த வங்காளதேசம் 211 ரன்னில் சுருண்டது. நியூசிலாந்து பீல்டிங் செய்தபோது, அந்த அணியின் கேப்டன் கேன் வில்லியம்ஸ்க்கு இடது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது.

    நியூசிலாந்து பேட்டிங் செய்யும்போது கேன் வில்லியம்சன் 74 ரன்கள் சேர்த்தார். ஆனால் அடிக்கடி மருத்துவ உதவி எடுத்துக்கொண்டார். இதனால் வங்காளதேசம் 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்யும்போது, இன்று கேன் வில்லியம்சன் பீல்டிங் செய்யவில்லை.

    காயம் மேலும் வீரியம் அடையாமல் இருக்க நியூசிலாந்து அணி நிர்வாகம் முன்னெச்சரிக்கை அடிப்படையில் அவரை பீல்டிங் செய்ய அனுமதிக்கவில்லை. நாளை கேன் வில்லியம்ஸ்-க்கு எம்ஆர்ஐ ஸ்கேன் செய்யப்படுகிறது. அப்போதுதான் அவரது காயம் குறித்த தகவல் முழுமையாக தெரியவரும்.

    உலகக்கோப்பை தொடர் நெருங்கும் நேரத்தில் கேன் வில்லியம்சனுக்கு காயம் ஏற்பட்டிருப்பது நியூசிலாந்துக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
    நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வங்காளதேசம் 234 ரன்னில் ஆல்அவுட் ஆனது. தொடக்க வீரர் தமிம் இக்பால் 126 ரன்கள் குவித்தார். #NZvBAN
    நியூசிலாந்து - வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் ஹாமில்டனில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற வங்காளதேசம் பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி வங்காளதேச அணியின் தமிம் இக்பால், ஷத்மான் இஸ்லாம் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.

    ஒருபுறம் சீரான இடைவெளியில் விக்கெட்டுக்கள் வீழ்ந்து கொண்டிருந்த நிலையிலும், மறுமுனையில் தமிம் இக்பால் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் அடித்தார். அவர் 128 பந்தில் 21 பவுண்டரி, 1 சிக்சருடன் 126 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.



    தமிம் இக்பால் ஆட்டமிழக்கும்போது வங்காளதேசம் 5 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் சேர்த்திருந்தது. அதன்பின் விக்கெட் மளமளவென சரிய 234 ரன்னில் ஆல்அவுட் ஆனது. நியூசிலாந்து அணி சார்பில் வாக்னர் 5 விக்கெட்டும், டிம் சவுத்தி 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து இன்றைய முதல் ஆட்ட முடிவில் விக்கெட் இழப்பின்றி 86 ரன்கள் அடித்துள்ளது. ராவல் 51 ரன்னுடனும், டாம் லாதம் 35 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
    இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் அணிகள் அதிர்ச்சி அளித்த நிலையில், யார் யாரை வேண்டுமென்றாலும் வீழ்த்தலாம் என்று கேன் வில்லியம்சன் தெரிவித்துள்ளார். #NZvBAN
    இலங்கை அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை யாரும் எதிர்பார்க்காத வகையில் 2-0 என வென்று சாதனைப் படைத்தது. அதைப்போல் இங்கிலாந்துக்கு எதிரான தொடரை 2-1 என வெஸ்ட் இண்டீஸ் கைப்பற்றியது.

    இந்நிலையில் நியூசிலாந்து - வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் நாளை தொடங்குகிறது. முதன்முறையாக நியூசிலாந்து ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் 2-வது இடத்தை பிடித்திருக்கும் நிலையில், யார் யாரை வேண்டுமென்றாலும் வீழ்த்த முடியும் என்று அந்த அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து கேன் வில்லியம்சன் கூறுகையில் ‘‘தென்ஆப்பிரிக்காவை இலங்கை வீழ்த்தியது அற்புதமான முயற்சி. தென்ஆப்பிரிக்கா போன்ற அணியை, அவர்களது சொந்த இடம் மட்டுமல்ல எந்த இடத்திலும் வெல்வது எளிதான காரியம் அல்ல. ஆனால், யார் யாரையும் வெல்ல முடியும்’’ என்றார்.
    வங்காளதேச அணிக்கெதிரான டெஸ்ட் தொடருக்கான நியூசிலாந்து அணியில் சுழற்பந்து வீச்சாளர் டாட் ஆஸ்ட்லே சேர்க்கப்பட்டுள்ளார். #NZvBAN
    வங்காளதேச கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை 0-3 என வங்காளதேசம் இழந்தது. இந்நிலையில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் வருகிற 28-ந்தேதி தொடங்குகிறது.

    இதற்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சுழற்பந்து வீச்சாளர் டாட் ஆஸ்ட்லே இடம்பிடித்துள்ளார். சான்ட்னெர், அஜாஸ் பட்டேல் ஆகியோர் சேர்க்கப்படவில்லை.

    நியூசிலாந்து அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. கேன் வில்லியம்சன் 2. டாட் ஆஸ்ட்லே 3. டிரென்ட் போல்ட் 4. கொலின் டி கிராண்ட்ஹோம் 5. ஹென்ரி 6. டாம் லாதம் 7. ஹென்ரி நிக்கோல்ஸ் 8. ஜீத் ராவல் 9. டிம் சவுத்தி 10. ராஸ் டெய்லர் 11. நீல் வாக்னர் 12. வாட்லிங் 13. வில் யங்
    வங்காளதேசத்தை 3-0 என ஒயிட்வாஷ் செய்து ஒருநாள் கிரிக்கெட் அணி தரவரிசையில் 3-வது இடத்திற்கு முன்னேறியது நியூசிலாந்து. #ICCRankings
    நியூசிலாந்து - வங்காளதேசம் அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. இதில் நியூசிலாந்து மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று வங்காளதேசத்தை 3-0 என ஒயிட் வாஷ் செய்தது.

    இதற்கு முன் நியூசிலாந்து இந்தியாவுக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. இதில் இந்தியா 4-1 எனத் தொடரை கைப்பற்றியது. இதனால் ஐசிசி தரவரிசையில் 3-வது இடத்தில் இருந்து 4-வது இடத்திற்கு பின்தங்கியது.

    தற்போது வங்காளதேசத்தை ஒயிட்வாஷ் செய்ததால் 112 புள்ளிகளுடன் மீண்டும் 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். தென்ஆப்பிரிக்கா 111 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் உள்ளார். இங்கிலாந்து 126 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், 122 புள்ளிகளுடன் இந்தியா 2-வது இடத்திலும் உள்ளது.
    நேப்பியரில் நடைபெற்ற வங்காளதேச அணிக்கெதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. #NZvBAN
    நேப்பியர்:

    வங்காளதேச கிரிக்கெட் அணி 3 ஒருநாள் போட்டி மற்றும் 3 டெஸ்டில் விளையாடுவதற்காக நியூசிலாந்து சென்றுள்ளது. நியூசிலாந்து- வங்காளதேச அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி நேப்பியரில் இன்று நடந்தது. ‘டாஸ்’ வென்ற வங்காளதேசம் பேட்டிங் தேர்வு செய்தது.

    அந்த அணி 48.5 ஓவர்களில் 232 ரன்கள் அடித்து ‘ஆல்அவுட்’ ஆனது. முகமது மிதுன் அதிகபட்சமாக 62 ரன்னும், முகமது சாய்புதீன் 41 ரன்னும் எடுத்தனர். போல்ட், சான்ட்னெர் தலா 3 விக்கெட்டும் பெர்குசன், ஹென்ரி தலா 2 விக்கெட்டும் எடுத்தனர்.

    பின்னர் 233 ரன் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணியின் மார்ட்டின் கப்தில், நிக்கோல்ஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அரைசதம் அடித்த நிக்கோல்ஸ் அணியின் ஸ்கோர் 103-ஆக இருக்கும்போது 53 ரன்னில் ஆட்டமிழந்தார்.



    அடுத்து வந்த கேப்டன் கேன் வில்லியம்சன் 11 ரன்னில் வெளியேறினார். 3-வது விக்கெட்டுக்கு மார்ட்டின் கப்தில் உடன் ராஸ் டெய்லர் ஜோடி சேர்ந்தார். இருவரும் அணியை வெற்றி நோக்கி அழைத்துச் சென்றனர். மார்ட்டின் கப்தில் 116 பந்தில் 117 ரன்களும், ராஸ் டெய்லர் 49 பந்தில் 45 ரன்களும் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருக்க நியூசிலாந்து 44.3 ஓவரில் 2 விக்கெட் இழபபிற்கு 233 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    சதமடித்த மார்ட்டின் கப்தில் ஆட்ட நாயகன் விருது பெற்றார். இரு அணிகளுக்கும் இடையிலான 2-வது ஆட்டம் கிறிஸ்ட்சர்ச்சில் வருகிற 16-ந்தேதி நடக்கிறது.
    நியூசிலாந்து ஒருநாள் தொடருக்கான வங்காளதேச அணியில் சபீர் ரஹ்மான், தஸ்கின் அகமது ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். #NZvBAN
    வங்காளதேச கிரிக்கெட் அணி நியூசிலாந்து சென்று தலா மூன்று ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது. இந்தத் தொடர் பிப்ரவரி 13-ந்தேதியில் இருந்து மார்ச் 20-ந்தேதி வரை நடக்கிறது.

    இந்தத் தொடருக்கான வங்காதேச அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஒருநாள் தொடரில் சபீர் ரஹ்மான், தஸ்கின் அகமது ஆகியோர் அணியில் இடம்பிடித்துள்ளனர்.

    ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான வங்காளதேச அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. மோர்தசா (கேப்டன்), 2. ஷாகிப் அல் ஹசன், 3. தமிம் இக்பால், 4. லித்தோன் தாஸ், 5. சவுமியா சர்கார், 6. முகமது மிதுன், 7. முஷ்பிகுர் ரஹிம், 8. மெஹ்முதுல்லா ரியாத், 9. மெஹிதி ஹசன், 10. நயீம் ஹசன், 11. முஷ்டாபிஜூர் ரஹ்மான், 12. ருபெல் ஹுசைன், 13. முகமது சாய்புதின், 14. தஸ்கின் அகமது, 15. சபீர் அகமது.

    டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கான வங்காளதேச அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. ஷாகிப் அல் ஹசன், 2. மெஹ்முதுல்லா ரியாத், 3. தமிம் இக்பால், 4. ஷத்மான் இஸ்லாம், 5. மொமினுல் ஹக்யூ, 6. லித்தோன் தாஸ், 7. முகமது மிதுன், 8. முஷ்பிகுர் ரஹிம், 9. மெஹிதி ஹசன், 10. நயீம் ஹசன், 11. தைஜுல் இஸ்லாம், 12. முஷ்டாபிஜூர் ரஹ்மான், 13. அபு ஜயெத், 14. காலெத் அஹமது. 15. தஸ்கின் அகமது.
    ×